சென்னை, டிச.4- பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு 2-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கயல் விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெண்களை சமூக பொருளாதார சுதந்திரம் உடையவர்களாக உயர்த்து வது, சமூகநீதி அரசியலின் மிக அடிப்படையான நோக்கமாகும். அதன் அடிப்படையில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான பல்வேறு திட்டங் களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
2-ஆவது இடம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான ‘உத்யம்’தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2021-2022ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 316 பேரும், 2022-2023ஆம் ஆண் டில் 2 லட்சத்து ஆயிரத்து 715 பேரும், 2023-2024ஆம் ஆண்டில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 342 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 373 பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களை பதிவுசெய்து இந்தியாவி லேயே 2-ஆவது இடத்தை பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
மகளிர் விடியல் பயணம், கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் போன்ற மகளி ருக்கான திட்டங்களின் வழியில் பெண் தொழில் முனைவோருக் கான சிறப்பு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்குதொடர்ந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள்; புத்தொழிலை ஊக்குவிப்பதற்கான மானியத்துடன் கூடிய டான்சீட் திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு தொகுப்புகள் போன்ற பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் இச்சாதனை சாத்தியப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் பெண்க ளுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை போன்ற வற்றை வழங்கி, தொழில் சார்ந்த விவரங் களை கற்பிப்பதுடன் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி, அவர்க ளைச் சுதந்திரமானவர்களாகவும், பொரு ளாதார தற்சார்புடையவர்களாகவும் மாற்றி, பாலினச் சமத்துவத்தை உறுதிப்ப டுத்தி, மகளிரின் வெற்றிப்பயணத்தை தமிழ்நாடு அரசின் வழியாக முதலமைச் சர் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.