முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (3.12.2024) தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழு!
புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவை அனுப்பவேண்டும் என்று நேற்று (2.11.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். அக்கோரிக்கையினை ஏற்று, புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழு தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறது.