ஆசிரியரின் 92-ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு “ஒரே வரியில்… விருப்பம் போல வாழ்க என்று வாழ்த்துகிறேன்” என்று தொலைப்பேசியில் வாழ்த்தினார் கவிப்பேரரசு.
நன்றி தெரிவித்த ஆசிரியர், “மனிதனின் விருப்பத்திற்கு எல்லையே இல்லையே கவிஞரே! அவன் பேராசை மட்டும் தானே எல்லாவற்றிற்கும் காரணம். விருப்பம் போல மனிதன் வாழத் தலைப்பட்டால் நீங்கள் நான்காவது உலகப் போரை அல்லவா எழுத வேண்டியது இருக்கும்!” என்றார்.
மறுமுனையில் கவிப்பேரரசு சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருந்தது.