சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடித்தளத்தில் இருந்து, தந்தை பெரியார் விட்டுச் சென்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளை தன் தோள்மீது சுமந்து பீடு நடைப் போட்டு வரும் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது 92 ஆம் ஆண்டுப் பிறந்தநாளை கொண்டாடுவதை எண்ணி அகம் மகிழ்கிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் என்ற பொறுப்பில் சீராகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் தனது கடமையை நிறைவேற்றி வரும் தமிழர் தலைவருக்கு 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தினை பதிவு செய்வதில் மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் என்ற வகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தனது 92ஆவது அகவையிலும் இளம் சிறுத்தையைபோல் ஓடி ஆடி பாய்ந்து சென்று கழகப் பணி செய்துவரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வளமாகவும் களமாகவும் சுகமாகவும் தந்தை பெரியாரின் பணி செய்து உலக தமிழர்களின் ஈடு இணையற்ற பகுத்தறிவு கதிராக ஒளிவீச வேண்டும் என்று வாழ்வாங்கு வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
டத்தோ ச.த.அண்ணாமலை
தலைவர், மலேசிய திராவிடர் கழகம்