ராஜஸ்தான், மேற்கு வங்க நிகழ்வுகளை மணிப்பூர் கொடுமையுடன் ஒப்பிடுவதா? ப.சிதம்பரம் தாக்கு

4 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 24- ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பெண் களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் சம் பவத்துடன் ஒன்றிய அரசு ஒப்பிடுவதை மேனாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். அவற்றை வைத்து எப்படி மணிப் பூரில் தொடரும் இடைவிடாத வன்முறையை மன்னிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், ‘பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தானில் கடுமையான நடவடிக்கை தேவைப் பட்டால், நிச்சயமாக மாநில அரசுகளை வலுவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள். ஆனால், மணிப் பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மாநிலங்களின் நிலைமையுடன் மணிப்பூரின் நிலைமையை எப்படி ஒப்பிட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், ஒன்றிய அரசு திறமையற்று, பக்கச்சார்புடன் இருப்பது மட்டுமின்றி, கேவலமான ஒப்பீடுகளின் திரைக்கு பின் னால் ஒளிந்து கொள்ளும்போது அது இரக்கமற்றதாகவும், கொடூரமானதாகவும் தெரிவதாக சாடியுள்ளார். மணிப்பூர் அரசு செயலற்று இருப்பதாகவும், ஒன்றிய அரசு தன்னைத்தானே கோமா நிலைக்கு கொண்டு சென்றிருப் பதாகவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

7 செயற்கை கோளுடன் விண்ணில் ஏவ தயாராக உள்ள பிஎஸ்எல்விசி 56 ராக்கேட்

அரசியல்

சென்னை, ஜூலை 24- சிங்கப்பூரின் டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்களுடன், பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவு வதற்கு இஸ்ரோவின் என்எஸ்அய்எல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை சிறிஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஜூலை 30ஆம் தேதி காலை 6 மணி யளவில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட் டுள்ளனர்.

இதில், முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல் படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவ நிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண் ணில் ஏவப்படுகின்றன. இவை அனைத்தும் தொழில் நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இணைய வழி சூதாட்ட மோசடி

ரூபாய் 58 கோடியை இழந்த தொழிலதிபர்

நாக்பூர், ஜூலை 24-  நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இணைய வழி சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்துள்ளார். மகாராட்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், ‘இணைய வழி சூதாட்டம் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்’ என்று, நவரத்தன் ஜெயின் என்பவர் ஆசை காட்டியுள்ளார். முதலில் தயங்கிய தொழிலதிபர், பிறகு நவரத்தன் கூறியபடி, இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளுக்கான இணையதள இணைப்பை (லிங்க்) வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து அவருக்கு அனுப்பிய நவரத்தன், எவ்வளவு பந்தயம் கட்ட வேண்டும் என்பது உட்பட சூதாட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கி வந்துள்ளார்.

ஆரம்பத்தில், தொழிலதிபருக்கு நிறைய வெற்றி கிடைத்தது. ரூ.5 கோடி வரை லாபம் பார்த்ததால், கூடுதல் நம்பிக்கையுடன் அதிக தொகை வைத்து சூதாடி உள்ளார். விரைவிலேயே அவருக்கு இழப்பு ஏற்படத் தொடங்கியது. ஆனாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் லாபம் பார்த்துவிடலாம் என்று நவரத்தன் ஆசைகாட்டி, தொடர்ந்து அவரை விளையாட வைத்துள்ளார். இதை நம்பி தொடர்ந்து விளையாடி வந்த தொழிலதிபர், மொத்தமாக ரூ.58 கோடி பணத்தை சூதாட்டத்தில் இழந்தார்.

ஒரு கட்டத்தில், சூதாட்ட இணைப்பு (லிங்க்) வழியாக நவரத்தன் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவதாக தொழில திபருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். காவல் துறையினர் நவரத் தனின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து ரூ.14 கோடி ரொக்கம், 4 கிலோ தங்க பிஸ்கெட்கள் சிக்கின. ஆனால், காவல் துறையினர் தேடுவதை அறிந்து, நவரத்தன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் துபாய்க்கு தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *