பதவி: நெருப்பு சுடாமல் குளிர்ச்சியாக மாறலாம். வேப்ப எண்ணெய் தேனாக மாறலாம். ஆனால், பதவி ஏற்றவன் யோக்கியனாக இருக்க முடியாது.
என் தலைவன்: கழகத்திடம் ஊதியம் பெற்று
வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத்
தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்த பணத்திலிருந்து ஒரு அரைக் காசாயினும் கழகத்திறகு செலவு செய்கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூட கருதுவேன்.
விளக்கு: விளக்கு லட்சுமி என்பதற்காக, மண வீட்டில் மட்டுமல்லாமல், பிணத்தருகிலும் கொளுத்தி வைக்கிறார்கள். ஏன்?
விளக்கு திரியில் இருந்தால் தொழ வேண் டும். கூரையில் இருந்தால் இகழ வேண்டும்.
மோசமானவை: ‘மோட்சமும்’, ’சுவர்க்கமும்’ இன்றைய கள்ளு – சாராயக் கடைகளைவிட, தாசி – வேசிகள் வீடுகளைவிட மோசமானவை என்பதை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.
பெரியார்: படிப்பைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. கேள்வி ஞானத்தால், எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் சக்தியால் தாமே வளர்த்துக் கொண்ட அறிவாற்றல்தான் அவருடைய ஆயுள்கால அறிவுக் களஞ்சியமாகியது. வாழ்நாளின் கடைசி வரை, அன்றாடப் பத்திரிகைகளைப் பார்ப்பது தவிர, புத்தக்கங்கள் எனப் பெரியார் படித்தவை மிகச் சிலவே. மாறாக அவர் பேசியவை, எழுதியவை எண்ணிலடங்கா புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
பெரியார் படிக்காதவராக இருக்கலாம்; ஆனாலும், அவர் படித்தவர்களுக்கு இணையாக மட்டுமின்றி, மேலோங்கி நிற்கவல்ல நுண்மான் நுழைபுலமும், வாதத் திறமையும் படைத்த பகுத்தறிவுச் சிற்பிப் பெரியார்!
– எஸ்.நல்லபெருமாள்