இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்
திருச்சி, நவ.29- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,
வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம் அறிஞர்கள் இடம்பெறும் சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 28.11.2024 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சி அரசு, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை வெளியிட்டு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக ஜெகதாம்பிகா பால் அவர்களின் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டுக்குழு அறிக்கை, நடக்கும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
2024ஆம் ஆண்டு வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்த அந்த நேரம் முதல், இன்றைய நாள் வரையிலும் இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.கூட்டுக் குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பேசியும், விமர்சித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின் றனர். முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் அனைத்தும் தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தி வரு கின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தனக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக் காமல் விடுபட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் முதன்முதலில் இந்த வக்பு சட்டத் திருத்த மசோதா பற்றிய தேசிய கருத்தரங்கைச் சென்னையில் நடத்தி, அந்தச் சட்டத்தில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் வெளிக் கொணர்ந் திருக்கிறது. மேனாள் ஒன்றிய அமைச்சர் ரஹ்மான்கான் கருத்தரங்கில் முதன்மைப் பேச்சாளராக தனது ஆழமான கருத்துகளை வெளியிட்டு, இந்த மசோதா திருத்த மசோதா அல்ல; வக்புகளையே இல்லாமல் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கான மசோதா என்று ஆணித்தரமாக விளக்கிக் காட்டினார்.
முஸ்லிம் சமுதாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் இந்த மசோ தாவுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. அய்ந்து கோடிக்கு மேலான கருத்துகள் – எதிர்ப்புகளாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு வந்து குவிந்திருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம் உள்வாங்கி நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினர், தங்களின் ஆய்வறிக்கையை வரும் நவம்பர் 28 அல்லது 29 தேதியில் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்குமாறு தீர்மானம் கொண்டுவரும் நிலை ஏற்படவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
2024 வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் காலக்கெடு நீட்டிப்பதை இந்திய முஸ்லிம் சமுதாயம் பாராட்டி வரவேற்கும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. பாரதீய ஜனதா கட்சி அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தவறான சட்டத்திருத்த மசோதாவை முழுமூச்சுடன் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் வக்பு சட்டம் எவ்விதக் குறைபாடுகளும் இல்லாமல் இருக்கிறது என்று யாரும் சொல்ல முன்வரமாட்டார்கள். அத்தகையக் குறைபாடுகளைக் களைவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினரால் மட்டும் இயலும் என்று கருதிட முடியாது. நடைமுறையில் உள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினரின் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவ தோடு, இந்திய முஸ்லிம் சமுதாயத் தின் ஏகோபித்த பிரதிநிதி சபை களாக உள்ளவைகளின் சார்பில் அறிஞர் குழுவையும் ஒன்றிய அரசு தனது ஆலோசனைக் குழு வாகக் கொண்டு அவர்களின் கருத்துகளையும் சேர்த்து திருத்தச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதே சாலப்பொருத்தமுடையதாகும்.
இந்தச் சிறப்பு ஆலோசனைக்குழுவில் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வக்பு சட்ட அறிஞர் ரஹ்மான்கான், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் தலைவர், ஜமீஅத்துல் உலமா யே ஹிந்த் அகில இந்திய தலைவர் ஆகியோர் இடம்பெற்றிட வேண்டும்.
ஸாரே ஜஹான்ஸே அச்சா இந்துஸ் தான் ஹமாரா என்பதில் நம்பிக்கை உள்ள முஸ்லிம் சமுதாயம், வக்பு திருத்த சட்டத்திற்கு அரிய ஆலோசனைகளை வழங்கி, நல்லது நாட்டில் நடக்க நாடுவோம்! இறை யருளைத் தேடுவோம் !
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.