காரைக்குடி, நவ.28- காரைக்குடி (கழக) மாவட்டம், கல்லல் ஒன்றியம், ஆலம்பட்டு கிராமத்தில் 23.11.2024 சனிக்கிழமை மாலை ஊர் பொதுமக்களால் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா – ஆலம்பட்டில் 1978 இல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு 46ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக மிகுந்த எழுச்சியோடு ஊர்ப் பொதுமக்களால் மகிழ்வோடு கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக பெரியார் சிலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய 20 அடி இரும்புக் கொடிக் கம்பத்தில் திராவிடர் கழகக் கொடியை கல்லல் ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் விசாலையன் கோட்டை கரு. அசோகன், காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி இருவரும் கழகக் கொடியை ஏற்றி வைத்தனர்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டுயொட்டி 1978இல் ஆலம்பட்டில் நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் செய்தார் காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு வைகறை. பிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து தோழர் ஆலம்பட்டு கி. சங்குநாதனின் புதிய இல்லத்து மாடியில் அமைக்கப்பட்ட இரும்பு கொடிக் கம்பத்தில் திராவிடர் கழக கொடியை கழகத் தோழர்கள் இணைந்து ஏற்றினார்கள்.
திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழாவில் நடை பெற்றது.
சுயமரியாதை வீரர் பொன் சங்கு. தமிழ்மாறன் தலைமையில் விழா நடைபெற்றது.
விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஆலம்பட்டு
கி. சங்குநாதன் வரவேற்புரை ஆற்ற ச.வசந்தகுமார்,
கே.வி.எஸ். இந்தூராஜ், அழ. பாரதி, கவிஞர் இளமதி உலகநாதன், கி.பொன்னம்பலம், மு.நெடுமாறன், வே.பூவேந்திரன், சீனிவாசன், கல்லல் ஒன்றிய கழக தலைவர் ஆ.சுப்பையா, மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி வீ.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் கல்லல் ஒன்றிய பெருந்தலைவர் சுயமரியாதை கல்லல் கரு.அசோகன், காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை, ஆலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கரு.அசோகன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் சி.சு இளைய கவுதமன், விசிக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வே.பாலையா, காரைக்குடி மாவட்ட கழக செயலாளர் சி.செல்வமணி, ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு. சு. கண்மணி, விசிக மேனாள் தெற்கு மாவட்ட செயலாளர் திரு மொழி அன்பழகன், வெற்றியூர் சதானந்தம், ப.க மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் கலந்து கொண்டனர்.
காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிட மணி, தொடக்க உரை ஆற்றினார்.
அவரது உரையில், ‘‘கல்லல் பகுதி அந்தக் காலத்தில் ஒரு சுயமரியாதை இயக்க கோட்டை யாக இருந்ததையும், இந்தப் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு தந்தை பெரியார் வந்து சென்றதை யும், அப்போது நடைபெற்ற சுயமரியாதை திரு மணங்கள், தாலி மறுப்பு திருமணங்கள், பெரியார் தொண்டர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு பேசினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே. மெ. மதிவதனி தனது உரையில்:
“ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்று ஜாதி ஒழிப்பை பேசிய உலகின் ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும்தான்,
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடுவது அவமானம் என்று கருதுகிற புதிய தலைமுறை உருவாகிஇருப்பது சுயமரியாதை இயக்கத்தின் மிகப்பெரிய போராட்ட வெற்றியாகும் . ஜாதி இழிவை நீக்குதலும், பெண்ணுரிமையைக் காப்பதுமே நமது கடமை ஆகும்.
ஆலம்பட்டில் கந்தா, கடம்பா, கதிர்வேலா என்கிற பெயர்களைக் காண முடியவில்லை தமிழ்மாறன், தமிழரசு, இளமதி, நெடுமாறன் என்ற இனமானப்பெயர்களைக் காண முடிகிறது.
பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, பாவாடை என பெயர் வைத்த காலத்தில் சுயமரியாதைமிக்க அருமைக்கண்ணு என்று பெயர் வைத்தவர் தந்தை பெரியார்.
ஆலம்பட்டில் பெரியார் அய்யா அருமைக்கண்ணு என்று பெயர் சூட்டிய அம்மையாரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி!’’ என்று நெகிழ்ச்சியோடு உரை யாற்றினார்.
விழாவில் 1961இல் தந்தை பெரியாரால் அரு மைக்கண்ணு என்று பெயர் சூட்டப்பட்ட அம்மை யாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
1963இல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவரான திராவிடர் கழகக் கொடி பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கும் ஆலம்பட்டு பாலமோகினி (வயது 85) அம்மையாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
ஆலம்பட்டு மா.முத்தழகு நன்றி கூறினார்.
நிகழ்வில் காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், மாநகரத் துணைத் தலைவர் ஆ.பழனி வேல்ராசன், தேவகோட்டை நகர செயலாளர் ந.பாரதிதாசன், மகளிரணி அமைப்பாளர் இள. நதியா, மாவட்ட ப.க தலைவர் துரை. செல்வம் முடியரசன், மாவட்ட பக துணைத் தலைவர் அ.அரவரசன், மாவட்ட பக அமைப்பாளர் த.பாலகிருஷ்ணன், மாவட்ட பக துணைத் தலைவர் முனைவர் செ.கோபால் சாமி, திராவிட தொழிலாளர் கழகத் தலைவர் சி.சூரியமூர்த்தி, செயலாளர் சொ.சேகர், தேவகோட்டை நகர ப.க அமைப்பாளர் சிவ.தில்லை ராசா, தேவகோட்டை ஒன்றிய செயலாளர் வாரியன் வயல் அ.ஜோசப், பெரியார் பெருந்தொண்டர் ச.கைவல்யம், கலாவதி கைவல்யம், காஞ்சிரங்கால் த.திருமேனி, ஒ.சிறுவயல் அரவிந்த் செல்வா மற்றும் காரைக்குடி சாருமதி, அரி சங்கர், ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் ஆலம்பட்டு இ.கவுசல்யா ராணி, சீ.மனிஷா, அ.தமயந்தி, ம.கவுசல்யா, கு. தீபா, கா.விஸ்வ நாதன், தமிழ்மாறன், பிரதிக் செல்வம், ச.சமராஜ், தொ.பில்லம்மை, சு.ஆறுமுகம், சொ.சரவண பாபு, பெ.முகிலன், ஜெ.பிரதீப், சோ.நித்யராஜ், ந. நதியா, சு.கனகம், ச. காயத்ரி, க.சவுந்தரம் மற்றும் 250 க்கு மேற்பட்ட ஊர் பொதுமக்கள் இளைஞர், மகளிர், குழந்தைகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற தோழர்களுக்கு புலால் உணவு வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் 150 எண்ணிக்கைகள் திராவிடர் கழக வெளியீடுகள் மாவட்டக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
120 குடும்பங்களைச் சேர்ந்த பெரியார் நகர் மூன்றாம் தலைமுறை ‘ஆலம்’ விழுதுகள் நன்றிப் பெருக்கோடு கொண்டாடிய முப்பெரும் விழா அப்பகுதியில் புத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.