டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: முதல் நாளிலே முடங்கியது நாடாளுமன்றம் – இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அமளி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*அரசமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது: அரசமைப்பு முகவுரையில் இருக்கும் செக்கியூலர் (மதச்சார்பற்ற) மற்றும் சோசியலிஸ்ட்(சமத்துவம்) ஆகிய வார்த்தைகளை அகற்றக்கோரி சுப்பிரமணிய சாமி மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர். மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு.
* ஜார்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கும் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் – ராகுல், தேஜஸ்வி, மம்தா பங்கேற்கின்றனர். நவம்பர் 28ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
* தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள் வகைப்படுத்துதல் (sub-categorisation) செய்திட பரிந்துரைக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நிரஞ்சன் பேட்டி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி. சம்பலில் அகழ்வாராய்ச்சி வதந்தி காரணமாக வன்முறையை தூண்டியதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என சம்பல் மசூதி நிர்வாகம் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
*’குற்றச்சாட்டு அதானி மீது உள்ளது, ஆனால் பாஜகவிற்கு வலிக்கிறது. மைனாரிட்டி மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கண்டனம். ”அங்க அடிச்சா, இங்க வலிக்கும்”.
– குடந்தை கருணா