சென்னை, நவ.24– வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாள்கள் 22.11.2024 அன்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் நா.முரு கானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்படும் ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாள்களும் பொதுவிடுமுறை நாள்களாக கருதப்படும் எனக் கூறியுள்ளார்.
மொத்தம் 24 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், விஜயதசமியும், காந்தி ஜெயந்தியும் ஒரே நாளாக அக்.2-இல் வருவதால் மொத்தம் 23 நாள்கள் விடுமுறை நாள்களாக உள்ளன.
தேதி….. பொது விடுமுறை
ஜன. 1…… ஆங்கிலப் புத்தாண்டு
ஜன.14…. பொங்கல்
ஜன. 15…. திருவள்ளுவர் நாள்
ஜன.16…. உழவர் திருநாள்
ஜன. 26…. குடியரசு நாள்
பிப். 11….. தைப்பூசம்
மார்ச் 30… தெலுங்கு ஆண்டு பிறப்பு
மார்ச் 31… ரம்ஜான்
ஏப்.1 . வங்கிகள் ஆண்டுகணக்கு முடிவு
(வணிக/ கூட்டுறவு வங்கிகள்)
ஏப்.10…… மகாவீரர் ஜெயந்தி
ஏப்.14…… தமிழ்ப் புத்தாண்டு/
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள்
ஏப்.18…… புனித வெள்ளி
மே 1 … மே நாள்
ஜூன் 7…. பக்ரீத்
ஜூலை … மொகரம்
ஆக.15…. சுதந்திர நாள்
ஆக. 16…. கிருஷ்ண ஜெயந்தி
ஆக. 27…. விநாயகர் சதுர்த்தி
செப்.5. மீலாது நபி
அக். 1 ஆயுதபூஜை
அக்.2 விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி
அக்.20….. தீபாவளி
டிச.25…… கிறிஸ்துமஸ்