22.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வேதாந்தா நிறுவனத்தின் கிளை அமைப்பான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மதுரை அருகே நாயக்கர் பட்டியில் டங்க்ஸ்டன் கனிமம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை என அரசு விளக்கம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ரூ.2,100 கோடி லஞ்சம் ஆந்திராவில் ஜெகன் அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான புகாரில் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை – நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்.
* அதானிக்கு எதிரான லஞ்சப் புகாரை அடுத்து, அவரது நிறுவன பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சி.
* அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பிரதமர் தான் அவரை பாதுகாக்கிறார், நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்புவேன், ராகுல் காந்தி ஆவேசம்.
தி இந்து:
* காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்
* உ.பி.யில் தாசில்தார் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு ‘ஒப்பந்த முறையில்’ ஆள் எடுக்க விளம்பரம். காங்கிரஸ் கண்டனம்.
– குடந்தை கருணா