நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
நாமக்கல், நவ.22- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 5 மணியளவில் திருச்செங்கோடு சட்டையம் புதூர் செங்குந்தர் திருமண மஹாலில் நடைபெற்றது
நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் மாவட்ட தலைவர் ஆ.கு.குமார் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் உரையில், தோழர்களுக்கு அவர்களுக்கு இட்ட பணிகளை எவ்வாறு சிறப்பாக செய்ய வேண்டும் வேலை களில் சுணக்கம் இருக்க கூடாது ஒவ்வொரு வேலைகளையும் கவனமாக சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு தகவல்களை கூறி தொடக்க உரை யாற்றினார்கள்.
தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை குறித்தும் நிகழ்வை சிறப்பாக நடத்துவது குறித்தும் பல்வேறு தகவல்களை எடுத்து கூறி உரை நிகழ்த்தினார்கள்.
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திருச்செங்கோடு அய்ம்பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும்,
அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பொறுப்பு வகிப்பவர்களுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பது எனவும்,
திராவிடர் கழக, திமுக மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரையும் சிறப்பாக வரவேற்பது எனவும் நிகழ்வை சிறப்பாக நடத்துவ தெனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வதெனவும்,
‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் கொடுப்பதெனவும்,
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘குடிஅரசு’ நூல் வெளியீட்டு விழா மாநாட்டிற்கு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பாக நான்கு வாகனங்களில் கலந்து கொள்வதெனவும்,
டிசம்பர் 28 29 ஆகிய நாள்க ளில் திருச்சியில் நடைபெற உள்ள இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு பெருவாரியாக நாமக்கல் மாவட்டம் சார்பாக கலந்து கொள்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.
புதிய தோழர்கள்
மா முத்துக்குமார், கி.நந்தகுமார், வே.பாரதிராஜா, மு.பூவரசன் ஆகிய தோழர்கள் புதிதாக இயக்கத்தில் இணைந்தனர்.
தலைமைக் கழக அமைப்பா ளர்கள் ஊமை.ஜெயராமன், ஆத்தூர் சுரேஷ் புதிய தோழர்க ளுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
புதிய தோழர்களுக்கு கழகப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
மா.முத்துக்குமார் திருச்செங்கோடு திராவிடர் கழக நகர செயலாளர்
திருச்செங்கோடு நகர இளைஞரணி
கி.நந்தகுமார் நகர இளைஞரணி தலைவர்
வே.பாரதிராஜா நகர இளை ஞரணி செயலாளர்
மு.பூவரசன் நகர இளைஞரணி அமைப்பாளர்
க.பொன்னுசாமி மாவட்ட துணைச் செயலாளர்,
சு.சரவணன் குமாரபாளையம் நகர தலைவர்,
திருச்செங்கோடு நகர தலைவர் வெ.மோகன்,
மாவட்ட இளைஞரணி செய லாளர் சு.சேகர்,
மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார்
கணேசன் நன்றி கூறினார். கலந்துரையாடல் கூட்டம் இனிதே நடைபெற்றது.