உணருமா உஞ்சவிருத்திகள்…?!

2 Min Read

ஆளுநரும் திருவள்ளுவர் மீது காவிச் சாயம் பூசி பூசிப் பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சாயம் வெளுத்து விடுகிறது!!
தமிழர் வரலாறு தெரியாத வடக்கிருந்து வந்த பார்ப்பனர்கள் எப்போதும் திராவிடர்களை வம்பு இழுப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவு “திருவள்ளுவர் உருவபட விளக்கம்” என்று ஒரு சிறிய நூல் வெளியீட்டில் ஓவியர்
கே.ஆர் . வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப்பட விளக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
40 ஆண்டு காலம் பல நூறு முறை முயன்று திருக்குறளின் ஒவ்வொரு பகுதியாக அலசி ஆராய்ந்து முடிவாக வரைந்து வெளிவந்தது தற்போதைய திருவள்ளுவர் படம்.
அவர் கூறுகிறார்: “மதி படைத்தோருக்கான பரந்து உயர்ந்த நெற்றி., ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி , பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள்., அறிவுத்திறனை அடையாளம் காட்டும் நீண்ட காதுகள்., உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராது என்ற வாக்குக்கு ஏற்ப அவரது திருமேனி வரையப்பட்டது.
உலகில் ஒப்புர வாழ்ந்து உயரும் விதி மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால் திருவள்ளுவருக்கு சமயக்குறிகள் மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆகின.

தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த நாக்கு, தூய்மையான குறிக்கோள் இவை இருப்பதால் திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை உடனிருத்தல் நன்று என்று கருதப்பட்டது” என்று தன் நூலில் விளக்கி இருக்கிறார்.
இம்மாபெரும் கலைப்படைப்பை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் முத்தமிழறிஞர் கலைஞர், எம் ஜி ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு. வரதராசனார், கண்ணதாசன் என பல்வேறு அறிஞர்கள் இந்த படத்தைப் பார்த்து அங்கீகரித்து இருக்கிறார்கள்.

1964 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது இந்த ஓவியம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டு சட்டப் பேரவையில் திறக்கப்பட்டது.
இப்படியாக வரையப்பட்ட உயிரோவியத்தை காவிச் சாயம் பூசும் ஊஞ்சவிருத்திகளுக்கு என்ன புரியும்??
நாட்டுடைமையாக்கப்பட்ட, ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஒரு ஓவியத்தின் மீது அரசுப் பணியாளரான ஆளுநரால் எப்படி இது மாற்றப்படுகிறது என்பதே நம் கேள்வி??
-பெரியார் குயில், தாராபுரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *