மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: சூப்பர்வைசர் பிரிவில் 12 (பிரின்டிங் 8, கன்ட்ரோல் 3, அய்.டி., 1), அலுவலக உதவியாளர் 4, ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் 95 (பிரின்டிங் 27, கன்ட்ரோல் 45, ஆய்வக உதவியாளர் 15, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, சிவில் 1) என மொத்தம் 111 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 21.8.2023 அடிப்படையில் அலுவலக உதவியாளர் 28, சூப்பர்வைசர் 30, மற்ற பிரிவுக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200
கடைசி நாள்: 21.8.2023
விவரங்களுக்கு: www.bnpdewas.spmcil.com