ஆத்தூர், நவ.20- பெரியார் பெருந்தொண்டர் கொட்டவாடி பெரியசாமி (வயது 90) 18.11.2024 அன்று காலை மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
ஆத்தூர் மாவட்ட தலைவர் த. வானவில் தலைமையில் மறைந்த பெரியசாமி உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் ஒருங்கிணைத்தார். ஆத்தூர், சேலம், மேட்டூர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மரியாதை செய்து இரங்கல் உரை ஆற்றினர்.
இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலை வர் அழகரசன், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பி.கணேசன், மாவட்ட தொழிலாளரணி வாழப்பாடி சிங்கிபுரம் கூத்தன், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராசன், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆத்தூர் மாவட்ட தலைவர் த.வானவில், மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் சி. சுப்பரமணியன். பெரியசாமி அவர்களின் பேரன் கவுதமன் இரங்கலுரை ஆற்றினர்.
மாவட்ட காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் இரங்கலில், பெரியசாமி அவர்களின் 40 ஆண்டு கால நட்பைப் பற்றியும், அவர் இந்த இயக்கத்தில் எப்படி பணிகளைச் செய்தார் என்பதைப் பற்றியும், அவர் குடும்பத்தை தன் பிள்ளைகளை எந்த அளவுக்கு உயர்த்தினார் என்பதையும், தோழர்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதையும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கொள்கை வழி மாறாமல் தடம் பதித்தவர் நமது பெரியசாமி என பேசி நிறைவு செய்தார்
இந்நிகழ்வில் ஆத்தூர் மாவட்ட காப்பாளர் விடுதலை சந்திரன், வாழப்பாடி சுகுமார், நரசிங்கபுரம் சைக்கிள் கடை மணி, நரசிங்கபுரம் மருத பழனிவேல், நரசிங்கபுரம் ராஜமாணிக்கம், நரசிங்கபுரம் தோழர் ராமகிருஷ்ணன், உடையாப்பட்டி சக்திவேல், புத்திரகவுண்டம்பாளையம் கூ.செல்வம், காட்டுக்கோட்டை தங்கராசு, ஆத்தூர் ஆ.செல்வம், ஓட்டுநர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.