பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மூத்த பொறியாளர் (சீனியர் இன்ஜினியர்) பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 4, எலக்ட்ரானிக்ஸ் 4, துணை பொறியாளர் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2, எலக்ட்ரிக்கல் 1, எலக்ட்ரானிக்ஸ் 2 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18 – 35, 18 – 28 (3.12.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.472. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கடடணம் இல்லை.
கடைசி நாள்: 3.12.2024
விவரங்களுக்கு: bel-india.in
என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
நெய்வேலியில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் காலியாக உள்ள 334 அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் இன்ஜினியர், துணைப் பொது மேலாளர் (Deputy General Manager) உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் டிச.17ஆம் தேதிக்குள் www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.