நீதிக்கட்சி தோற்றமான நாளில் (நவ.20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, நவ.20- நீதிக்கட்சி உருவான (20.11.1916) நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது,
வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன் னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி, இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி – என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக் கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெ டுத்து நிலைநாட்டும் பய ணத்தில் உழைப்பைச் செலுத் திடுவோம்! வென்றிடுவோம்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.