நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப் படவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதுவே இந்தியாவின் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் என்றார். வரும் 25ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.