மதுரை, ஜூலை 26- மதுரை அனுப்பானடி பகுதியில் வைக்கம் போராட்டம் முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 9.7.2023 அன்று மாலை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ் தலைமையில் தொடங்கி யது. தொடக்க நிகழ்வாக சுப.பெரியார்பித்தன் கண்ணைக் கட்டிக் கொண்டு இருசக்கர வாக னத்தில் மக்களுக்கிடையே வலம் வந்து மேடையில் கண்களை கட்டிய துணியை அவிழ்த்துகாட்டி விளக்க மளித்து மந்திரமா, தந்தி ரமா? நிகழ்வைத் தொடங் கும் வேளையில் கடும் மழை காரணமாக நிகழ்ச்சி தடைபட்டது.
பொறுப்பாளர்கள் மழைபெய்தபோதிலும் நிகழ்ச்சியை எப்படியும் நடத்தவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தி னார்கள்.
மாவட்டச் செயலா ளர் சுப.முருகானந்தம் தொடக்கவுரையாற்றி 5 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட இப்பகுதியில் வாழும் வர்த்தகர்கள், திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகள், வட்டச் செயலாளர் மாமன்ற உறுப்பினர்களின் ஆத ரவே எனக்கூறி அவர்க ளுக்கு பயனாடை அணி வித்து பாராட்டுரைத் தார். மழை ஓய்ந்தபின் மேடையில் கூட்டம் தொடங்கியது. பகுத் தறிவு எழுத்தாளர் மன் றத்தின் மாநில தலைவர் வா.நேரு. உரையில், இக் கால கட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் உழைப்பு எவ்வண் ணம் பலனளிக்கிறது என் பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
திராவிட முன்னேற் றக் கழகத்தின் பேச்சாளர் கவிஞர் ஜீவா உரையில் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நம் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டை பட்டியலிட்டார்.
நிறைவாக உரையாற் றிய கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பாக தம் உரையில் முத்தமிழ் அறி ஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண் டைக் கொண்டாடுவதின் அவசியத்தையும், அவ ரால் தமிழ் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட திட்டங் களும், அதனால் மக்கள் அடைந்த நன்மைகளை யும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பட்டிய லிட்டு உரையாற்றினார்.
நிகழ்வினை தலை மைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் ஒருங்கி ணைத்தார்.
மாவட்டத் தலைவர் அ.முருகானந் தம் முன்னிலை வகித்தார். பகுதித் தோழர்கள் பேக் கரி கண்ணன், வேல்துரை, துரைநாகராஜ் ஆகி யோர் பாராட்டப்பட் டார்கள்.
நிகழ்வில் க.சிவா, நாகராணி, சீர்த்தி, சுமதி மணிராஜ் சாமிநாதன், ஆட்டோசெல்வம், எல்அய்சி மோதிலால், இராதா, சுரேஷ், வடக்கு மாசிவீதி தேவராஜ், மதுரைமாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான தோழர்கள் கலந்துகொள்ள கூட்டம் சிறப்புடன் நடைபெற் றது.