மன்னார்குடி மாவட்டம் வடுவூரில் அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை, சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக தென்பாதி ஊராட்சி மன்றம் வழங் கிய இடத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 09.07.2023 அன்று வெகு சிறப்பாக திறக்கப்பட்டது.
சிலை சீரமைப்பு பணி முழுமையையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்த தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவனை 14.07.2023 அன்று மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி, தலைவர் இரா,வில்வ நாதன் பயனாடை அணிவித்தார். உடன் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் மற்றும் சி.செங்குட்டுவன் அவர்களின் இணையரும் பங்கேற்றனர்.