ஒசூர், நவ.18- ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாவட்ட இளைஞரணி தலைவரது பணிமனை வளாகத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாகை பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
வந்திருந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்றார்.மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தொடக்க வுரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தருமபுரி செல்லதுரை கூட்டத்தின் நோக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச்செயலாளர் இரா.செயசந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வா.செ.மதிவாணன் கருத்துரைக்குப் பின் தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். அவர் உரையாற்றுகையில் மாவட்டத்தில் இளைஞரணி அமைப்பு வலுவாக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாகை பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில துணைச்செயலாளர் தருமபுரி செல்லதுரை ஆகியோருக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் மதிவாணன் பயனாடை அணி வித்துத் தனது மகிழ்வை தெரிவித்தார்.
கூட்டத்தில் ஒசூர் மாவட்ட இளைஞரணி தலைவராக வா.செ.மதிவாணன், செயலாளர் பி.டார்வின் பேரறிவு, துணைத் தலைவர் இரா.சந்தோஷ் ஆகியோரை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டனர். மீண்டும் மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள மதிவாணனுக்கும், புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மோகன் ராமுவுக்கும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக, மாவட்டத்தில் இளைஞரணியை புதுப்பித்து கட்டமைப்பது என்றும்,
டிசம்பர் 2 இல் தந்தை பெரியார் கொள்கை வாரிசு நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கான நிதியை அதிக அளவில் திரட்டுவது என்றும்,
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் திரளாக இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக மாவட்ட துணைச்செயலாளர் இரா.செயசந்திரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.