பேராசிரியர் சி. இலக்குவனார் பிறந்த நாள் (17.11.1909)
குடவாயில் கழக உயர்தரப் பள்ளி தமிழாசிரியர் வித்வான் தோழர் சி.இலக்குவன் அவர்கட்கும், மன்னார்குடித் தோழர் மு.பட்டம்மான அவர்கட்கும் 10-9-1937 மாலை 5.30 மணிக்குக் கும்பகோணம் நாடார் மகா ஜன சங்கக் கட்டிடத்தில் தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலைமைபில் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களைப் பாராட்டிப் பல தோழர்கள் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பின் சு.ம.சங்கக் காரியதரிசியால் நன்றி கூறப்பட்டது. 400 பேருக்கு மேற்பட்ட தோழர்களுக்குச் சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
– ‘விடுதலை’- 23-09-1937, பக்கம் 2