சென்னை, நவ.16- தமிழ்நாட்டில் அர சுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடா்பான அறிக்கை முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் சமா்ப்பிக்கப் படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூ ரில் உள்ள அரசுப் பள்ளியில் 234/77 என்ற ஆய்வுத் திட்டத்தின் கீழ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 14.11.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஜி.கே.எம். காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்ற அவா், அங்கு ஏ.அய். தொழில்நுட்பம் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவா்களை சந்தித்து அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சரின் காலை உணவை மாணவா்களுக்கு பரிமாறி, பள்ளியின் உள்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற் கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு ஆசிரியா் களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியா ளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் கூறிய தாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 2022-ஆம் ஆண்டு 10.10.2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். ஒரு தொகுதிக்கு ஒரு அரசுப் பள்ளி வீதம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளாக நடை பெற்று வந்த இந்தப் பணி முதலமைச்சர்ரின் தொகு தியில் 14.11.2024 அன்று நிறைவு பெற்றுள்ளது.
பேராசிரியா் அன்பழ கன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகம், சுற்றுச்சூழல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2,467 கோடி மதிப்பிலான 14,109 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
விரைவில் சமா்ப்பிப்பு:
இந்த ஆய்வின்போது பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகள், ஆசிரி யா்கள் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறைக்கு தேவையான 77 வகை பொருள்கள் குறித்து கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 234 தொகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை முதலமைச்சா் மு.க.ஸ்டா லினிடம் சமா்ப்பிக்கப்படும் என்றார் அவா்.
ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, கல் வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.