மயிலாடுதுறை, நவ.16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் கடந்த 12.11.2024 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட அலுவ லகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சீனி.முத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆசிரியர் பி.மதிவாணனுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி தெரிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில், ஈரோட்டில் நவம்பர் 26 அன்று நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தனி வாகனங்களில் சென்று திரளாகக் கலந்து கொள்வது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமைக் கழக அறிவு றுத்தலின்படி ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்களை சேகரித்து வழங்குவது எனவும்,
டிசம்பர் 27,28 ஆகிய தேதிகளில் திருச்சி யில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் பெருவாரியாக பேரா ளர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், இரண்டு நாள் மாநாட்டிலும் பங்கேற்பது எனவும்,
டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும், டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நினைவு நாளில், மாவட்டக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு பேரணியாகப் புறப்பட்டு, மாலை அணிவிப்பது என்றும், மேற்படி நிகழ்வில் பல்வேறு அமைப்பினரையும் கலந்துகொள்ளச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் மயி லாடுதுறை ஒன்றிய செயலாளர் ஆ.சாமி துரை, சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்தி ரசேகரன், செயலாளர் கடவாசல் செல்வம், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.பாண்டியன், செயலாளர் பூ.பாண்டுரங்கன், செம்பை ஒன்றிய செய லாளர் எஸ்.பி.கே. கவுதமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் க.செல்வராஜ், ஜெகன் சாமிக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் ஈரோடு- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சென்னை – தமிழர் தலைவர் பிறந்தநாள், திருச்சி – பகுத்தறிவாளர் மாநாடு நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்க முடிவு!
Leave a Comment