தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ‘திராவிட மாடல்’ திட்டங்களில் ஒன்றான ‘மகளிர் உரிமைத் தொகை’ ரூ.1000 மாதா மாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும். பல நிதி நெருக்கடிக்கிடையில் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது – ‘திராவிடர் மாடல்’ ஆட்சியில்!
இதனால் மகளிர் தங்கள் வாழ்வில் மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வைப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவது குறித்து மகிழ்ந்து முதலமைச்சர் – இந்தத் திட்டத்தை வாழ்த்தி வருகின்றனர்.
தற்போது, மற்ற கட்சிகள் (எதிர்க்கட்சிகள் உள்பட) மகளிர் உரிமைத் தொகையாக அதைவிட இரு மடங்கு, மும்மடங்கு தருவோம் என தங்கள் தேர்தல் அறிக்கையில் (ஜார்க்கண்ட், மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல்) கூச்சமின்றி கூறியிருக்கின்றன. அது சாத்தியமா என்பதைப் பற்றிக்கூட சிந்திக்காமல் அறிவிக்கின்றன.
அது சாத்தியமோ, சாத்தியமில்லையோ ஒன்று மட்டும் சாத்தியமானது.
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்புத் திட்டமான ’மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் நாடு முழுவதும் பரவி, பிரபலமாக வலம் வரத் தொடங்கி விட்டது என்பது நல்லதொரு சாதனை தானே!
இனி எல்லாத் திட்டங்களும் அவர்களால் பின்பற்றப் படுமா?
அதிகரித்து வரும் மாசு
5-ஆம் வகுப்பு வரை இணைய வழியில் கல்வி
புதுடில்லி, நவ.15 அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் டில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்றலுக்கு மாறும் என்று முதலமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், மத்திய மாசுக் கண்காணிப்பு அமைப்பான காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) முன்னதாக டில்லி- என்சிஆா் பகுதிகளில் கிராப் -3-இன் கீழ் கட்டுப்பாடுகளை விதித்தது. தேசியத் தலைநகரின் காற்றின் தரம் தொடா்ந்து இரண்டாவது நாளாக ’கடுமை’ பிரிவில் இருந்ததால், கடுமையான மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை விதிக்க அதிகாரிகளைத் தூண்டியது. இந்த கட்டுப்பாடுகள் இன்று(15.11.2024) முதல் அமலுக்கு வருகிறது. ‘அதிகரிக்கும் மாசு அளவுகள் காரணமாக, டில்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை இணைய வழி வகுப்புகளுக்கு மாற்றப்படும்’ என்று கல்வி இலாகாவை வைத்திருக்கும் அதிஷி, எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளார்.
காற்றின் தர மேலாண்மை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (கிராப்) மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள நடவடிக்கைகள் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை இணைய வழி கற்றல் முறைக்கு மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.