சென்னை, நவ.15- ‘கூட்டுறவு’ செயலி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.60 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘கூட்டுறவு’ செயலி
கூட்டுறவு சங்கங் களை டிஜிட்டல் மய மாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அனைத்து சேவைகளையும் அறிந்து கொள்ளவும், சேவைகளை பெறவும், கூட்டுறவுச்சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய ‘கூட்டுறவு’ என்ற செயலி கடந்த ஆகஸ்டு 27ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற் றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தை இணைய வழியே சமர்ப் பித்திடவும் முடியும்.
இந்த செயலி மூலம், பயிர்க்கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக்கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணி கக்கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக்கடன், மூத்த குடிமக்களுக்கான அட மானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பிக்கமுடியும்.
இந்த நிலையில், ‘கூட்டுறவு’ செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சுமார் இரண்டரை மாதங்களில் ஒரு லட் சத்திற்கும் மேற்பட்டோர் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலி மூலம் வழங்கப்பட்டுள்ள கடன் விவரம் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி கூறும்போது, “கூட்டுறவு’செயலி மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, ரூ.60 கோடிக்கும் மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பயிர்க்கடன் பெறுவதற்கான சீசன் என்பதால் அதிக மக்கள் பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்து வரு கின்றனர். மேலும், இதர கடன்களுக்கும் ‘கூட்டுறவு’செயலி மூலம் விண் ணப்பிக்க தொடங்கி உள்ளனர்” என்றார்.