நவம்பர்-26 ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்கவும் – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில்
பொள்ளாச்சி கழக மாவட்டம் சார்பில் பெரியார் உலக நிதி வழங்கவும்
பொள்ளாச்சி, நவ.15- நவம்பர்-26 ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்க வும், டிசம்பர்-2 தமிழர் தலை வர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் பொள்ளாச்சி கழக மாவட்டம் சார்பில் பெரியார் உலக நிதி வழங்கவும் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் பொள்ளாச்சி ம.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று, ஈரோடு மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா குறித்தும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகளை குறித்தும் எடுத்துரைத்தார். பொள்ளாச்சி மாவட்டத்தில் கழகப் பிரச்சார பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உரை யாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் செழியன்,மாவட்டத் துணைச் செயலாளர் சிவ ராஜ், நகரத் தலைவர் வடி வேல், நகர அமைப்பாளர் வீர மலை, மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவின்குமார், மகளிரணித் தோழர்கள் வீரமணி,ஆனந்தி, ஆ.பேரறிவாளன்,மாவட்ட மாணவர் கழக செயலாளர் தருண், ஒன்றிய அமைப்பாளர் முருகானந்தம், அன்பழகன், மாநில ப.க அமைப்பாளர் தரும. வீரமணி,மாவட்ட காப்பாளர் பொறியாளர் பர மசிவம்,மாவட்ட தலைவர் மாரிமுத்து, கோவைமாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கூட்டத்தில், நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு சுயமரியாத இயக்க நூற்றாண்டு மாநாட்டில் பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலை வர் ஆசிரியர் பிறந்தநாள் விழா வில் (சுயமரியாதை நாள்) சென்னை யில் பொள்ளாச்சி கழக மாவட்டத்திலிருந்து பெருந்திர ளாக பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘விடுதலை’ சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்று வது உள்ளிட்ட நிகழ்வுகளை பொள்ளாச்சி மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் பொள்ளாச்சி கழக மாவட்டத்திலிருந்து பெருந்தி ரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டங் களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும்,
கோவையில் தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் அறிவுசார் நூலகம் மற்றும் அறிவியல் மய்யம் அமைக்கப்படும் என அறிவித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.