தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாசாப் பேட்டையைச் சேர்ந்த, உதயநிதி மன்ற ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்வாணன், தி.மு.க. இளைஞரணி நடத்திய ”என் உயிரினும் மேலான” எனும் தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 பேரில் ஒருவராக வந்ததற்கான சான்றிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். (பெரியார் திடல், 13.11.2024)

திராவிடர் கழகம்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தனது 90 ஆம் அகவை நிறைவு விழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அந்நிகழ்வுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அழைப்பு விடுத்து, ‘செம்மொழி வென்ற போர்க்களம்’ எனும் புத்தகத்தை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிறந்தநாள் விழாக்குழுவின் செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார், இணைச் செயலாளர் மதுரகவி கவிஞர் மறத்தமிழன். (பெரியார் திடல், 12.11.2024)

திராவிடர் கழகம்

முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி, தான் எழுதி, இசையமைத்த “இனிக்கும் இலக்கணம்” எனும் தலைப் பில் இசைப் பாடல்கள் வடிவிலான நூல் மற்றும் காணொலி வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 13.11.2024)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *