பெரம்பலூர், நவ.11- பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை நள்ளிரவு நேரத்தில் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிலையை சேதத்தை படுத்திய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால், கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதால், அரும்பாவூர் காவல்துயைினர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் கடந்த ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற தேர் திருவிழாவின் போது வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் மற்றும் திருமாவளவன் பதாகைகள் மின் விளக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி உள்ளிட்ட பொருட்களை நள்ளிரவில் சேதப்படுத்தினர்.
இது சம்பந்தமாகவும் கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்று அந்த கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
தொடர்ச்சியாக இதுபோன்ற சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கமாக செயல்படும் வரும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.