தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ச.முரசொலி அவர்க ளின் அலுவலகம் திறப்பு விழா கடந்த 7 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் இராமநாதன் மருத்துவமனை அருகில் நடைபெற்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மக்க ளவை உறுப்பினர் முரசொலி ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தில் உள்ள கலைஞர் நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கழகப் பொறுப்பாளர்கள் நூல்களை வழங்கி வாழ்த்தினர்!

Leave a Comment