ந.க.எண்.001812/2020/அ2 நாள் 4.11.2024
குழித்துறை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகராட்சியாக அறிவிக்கப்பட்டு (ODF+) தொடர்ந்து அத்தகைய நிலையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் அடுத்த நிலை (ODF++) சான்று பெறுவதற்கு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நகராட்சிப் பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ற சுய உறுதிமொழி சான்றிதழுக்கு (Self Declaration) நகர்மன்றம் அனுமதி அளித்துள்ளது
இதற்கு பொது மக்கள் இந்நகராட்சிக்கு (ODF++) சான்று பெறுவது தொடர்பான தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் ஆணையாளர் – குழித்துறை நகராட்சி அவர்களுக்கு எழுத்து வாயிலாக 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆணையாளர்
குழித்துறை நகராட்சி.
நகர் மன்றத் தலைவர்
குழித்துறை நகராட்சி
வெ.ஆ.எண்: 291/செ.ம.தொ.அ/க.கு/நாள் 8.11.2024