உரத்தநாடு ஆயங்குடி அண்ணா. மாதவன்-துர்கா மணவிழா: கழக பொறுப்பாளர்கள் வாழ்த்து

Viduthalai
1 Min Read

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆயங்குடி கழக இளைஞரணி தோழர் அண்ணா.மாதவன்-பொன்.துர்கா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு வரவேற்பு விழா நேற்று (8-11-2024) காலை 11 மணியளவில் உரத்தநாடு எல்.ஜி.வி.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா. குணசேகரன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ. ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், வீதி நாடகக் கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியாரநேசன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.இராமமூர்த்தி, உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மதியழகன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப்பாண்டியன், மண்டலகோட்டை மோகன்தாஸ் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *