மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்- ‘புரட்சியின் குரல்!’

1 Min Read

அரசியல்

இம்பால், ஜூலை 28- மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் ‘புரட்சியின் குரல்’ என்ற செய்தித் தாளை தொடங்கியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. 

அதிலும் அங்கு சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம், மேலும் அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் பல தரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இரு தினங்களுக்கு முன்பு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

பிராட் பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இணைய சேவைக் கான தடை தொடர்கிறது. 

இந்நிலையில் மலைப் பகுதிகளில் பரவலாக வாழும் குகி மக்கள் மணிப்பூரில் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளவும் தகவல் பரிமாற்றத்திற்காகவும் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கி யுள்ளது. 

‘ஸலேன் அவ்கின்’ (Zalen Awgin) என்ற பெயரில் தொடங்கியுள்ள இதன் அர்த்தம் ‘புரட்சியின் குரல்’ (The Voice of the Revolution). 

குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அனைத்து கிராமங்களுக்கும் இந்தச் செய்தித்தாள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *