தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள். 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சோ. மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர், முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ. ஆ. நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்
Leave a comment