கல்லக்குறிச்சி நவ.6- கல்லக்குறிச்சி மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் 3.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் மாவட்ட தி.க தலைவர் கோ.சா.பாஸ்கர் அலுவலகத்தில் மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு ஆகியோர் முன்னிலையில், வீ.முருகேசன் மாவட்ட ப.க. செயலாளர் வரவேற்க மாநில ப.க. பொதுச்செயலாளர் வா.தமிழ்பிரபாகரன், மாநில ப.க. அமைப்பாளர் சிவமூர்த்தி ஆகி யோர் திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதியில் நடக்கும் இந்திய பகுத்தறி வாளர், நாத்திகர்கள், மனித நேய மாண்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள மாநாடு பற்றியும் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் மருத்துவர் கோ.சா.குமார் மாநில தி.க மருத்துவரணி செய லாளர்,கோ.சா.பாஸ்கர் மாவட்ட கழகத் தலைவர், ச.சுந்தரராசன் மாவட்ட கழக செயலாளர்,பெ.எழிலரசன் மாவட்ட ப.க தலைவர், வீ.முருகேசன் மாவட்ட ப.க. செயலாளர்,மாவட்ட கழக இலக்கிய அணி தலைவர் புலவர் பெ.செயராமன்,மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் மேலூர் முத்துவேல்,குழ.செல்வராசு மாவட்ட கழக துணைத் தலைவர், கல்லக்குறிச்சி நகர கழக தலைவர் இரா.முத்துசாமி, மாநில ஆசிரியரணி செயலாளர் ஆத்தூர் மாயக்கண்ணன் ஆசிரியர் உள்ளிட்ட தோழர்கள் கருத்து தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில், திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் நாத்திக மாநாட்டிற்கு நமது மாவட்டத்தின் சார்பில் கழகத் தோழர்கள் தனி வாகனத்தில் சென்று கலந்துகொள்வதெனவும், நடைபெறும் மாநாட்டிற்கு நமது மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நன்கொடை பெற்று தருவதெனவும், மாவட்ட கழகத்தின் சார்பாக ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார்பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆகிய இதழ்களுக்கு சந்தா சேர்த்து வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நகர கழகத் தலைவர் முத்துசாமி நன்றி கூற, கலந்துரையாடல் முடிவ டைந்தது.