பார்ப்பன ஆணவம் – நடிகை மன்னிப்பு கேட்டார்

viduthalai
2 Min Read

சென்னை, நவ. 6- தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில், தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும் போது, தெலுங்கு மக்கள் தொடர்பாகதெரிவித்த கருத் துகள் சர்ச்சையானது. இதற்கு பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன.

இதையடுத்து நடிகை கஸ்தூரி 4.11.2024 அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ‘தெலுங்கு மக்கள் பற்றி தவறாகபேசவில்லை.திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை திசைதிருப்பி விட்டார்கள்.’ என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் தனது கருத் துக்கு வருத்தம் தெரிவித்து, நடிகை கஸ்தூரி ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 நாட்களாக எனக்கு மிரட்டல்களும், அச்சுறுத்தல் களும் வந்துகொண்டிருக்கின்றன. நான் பேசியதை திரித்து நிலைமையை கடுமையாக்கி விட்டார்கள். அதேவேளை நான் மிகவும் மதிக்கக்கூடிய தெலுங்கு சகோதரர் ஒருவர், நேற்று என்னை சந்தித்து நான் பேசிய கருத்துகள் குறித்து பொறுமையாக விளக்கினார். நான் ஒரு உண்மையான தேசியவாதி. ஜாதி-பிரதேச வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட் டவள். தெலுங்கு மக்களுடன் எனக்கு சிறப்பு தொடர்பு இருப்பது எனது ‘அதிர்ஷ்டமாகவே’ பார்க்கிறேன். நாயக்கர் மன்னர்கள், கட்ட பொம்மன் நாயக்கர், தியாகராஜ கிருதிகளின் புகழ் பெருமை பாடி வளர்ந்தவள். தெலுங்கில் என் திரையுலக வாழ்க் கையை நான் மிகவும் மதிக்கி றேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை கொடுத்துள்ளனர்.

மன்னிப்பு

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்குபொது வானவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. கவனக்குறை வாக ஏதேனும் மோசமான உணர்வை நான் ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மன் னிப்புகேட்டுக்கொள்கிறேன். அனைவரின் நலன் கருதி, தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கஸ்தூரி மீது வழக்கு பாய்ந்தது

தெலுங்கு மக்கள் பற்றி பேசியது தொடர்பாக நடிகை கஸ்தூரிமீது பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப் பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *