திருவனந்தபுரம், நவ.5- நவம்பர் 13-ஆம் தேதி பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள காரணத் தால், அன்றைய நாள் சில தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தேதியை மாற்றக் கோரி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலம் பாலக்காடு, பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக், சப்பேவால், பர்னாலா மற்றும் கிட்டெர்பாஹா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு நவ. 13ஆம் தேதிக்கு பதிலாக நவ. 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீராப்பூர், காசியாபாத், கர்ஹல் உள்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நவ. 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், முன்பே அறிவித் திருந்தபடி, நவ. 23 மற்றும் 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்ட மிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.