4.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புதிய பிற்படுத்தப் பட்டோர் குழு இன்று நியமனம்; உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, தெலங்கானா அரசு முடிவு.
* அரசியல் சட்டத்தை பாதுகாக்க நடைபெறும் போராட்டம், வயநாட்டில் ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்க்கண்டில் ஒரே சிவில் சட்டம், பழங்குடியினர் தவிர அமல்படுத்துவோம் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு, நாங்கள் சிவில் சட்டத்தை ஜார்க்கண்டி லேயே அனுமதி மாட்டோம் என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிலடி.
* வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டால் மைனாரிட்டி மோடி அரசுக்கு ‘ஊன்று கோல்கள்’ ஆக இருக்கும் தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் தங்கள் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது என்று ஜாமியாத் கூட்டத்தில் எச்சரிக்கை
* ஹிந்தி திணிப்பு போன்ற வெளித் தாக்கங்களிலிருந்து அந்தந்த மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழ்நாடும் கேரளாவும் ஒன்றிணைய வேண்டும் என்று கேரளாவில் கோழிக்கோடு மலையாள மனோரமா நாளிதழின் கலை மற்றும் இலக்கிய விழாவில் ‘திராவிட அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியல் நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தி டெலிகிராப்:
* “நிலக்கரி ராயல்டி மற்றும் ஒன்றிய அரசின் திட்டப் பலன்களில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பல லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு பாக்கி வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மக்களிடம் வாக்கு கேட்கும் முன் மாநிலத்திற்கு ரூ.1.36 லட்சம் கோடியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்” என்று காங்கிரஸ் வலியுறுத்தல்
* ஹிந்து கோயிலுக்குள் சமாஜ்வாதி கட்சி ஷிசாமாவ் தொகுதியின் வேட்பாளர் நசீம் சோலங்கி வரு கையை அடுத்து, கங்கை நீரால் கோவிலை பூசாரிகள் தூய்மைப்படுத்தினர். முஸ்லீம் என்பதால் கோயில் தீட்டாயிடுத்தாம்.
– குடந்தை கருணா