ஆத்தூர், நவ.2- ஆத்தூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.11.2024) மாலை 5.30 மணியளவில் மாவட்டத் தலைவர் வானவில் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர். ப.வேல்முருகன். வரவேற்றார். கழக காப்பாளர் தங்கவேல். தலைமை கழக அமைப்பாளர் ஆ.சுரேஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் த.வானவில், மாவட்ட செயலாளர் மு.சேகர் கருத்துரை ஆற்றினார்கள்.
நிகழ்வில் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ்பிரபாகரன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன், நகர செயலாளர் வெ. அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் விஜய் ஆனந்த், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.சத்யமூர்த்தி, இளைஞரணி பொறுப்பாளர் சே செந்தமிழ் சேரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மு.மோகன்ராஜ். மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் மகிழ்வாக, ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும் புதிய கிளைக் கழகம் அமைத்து கழக இளைஞரணியை புதுப்பிப்பது எனவும், ஆத்தூர் கழக மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பதாகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல் பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் எனவும்,
டிசம்பர் 02 – தந்தை பெரியாரின் தத்துவக் கொள்கை வாரிசு தமிழர் தலைவர் நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிட முடிவு செய்யப்படுகிறது எனவும்,
நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு கருத்தரங்கம் பேரணி நிகழ்விற்கு ஆத்தூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இளைஞர்களை பங்குபெறச் செய்வது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்தநாள் மகிழ்வாக ஆத்தூர் மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் விளம்பர தட்டி வைத்த பிரச்சாரம் செய்வதெனவும்,
நவம்பர் 3 சென்னையில் நடைபெறவுள்ள வர்ணாசிரமம் எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆத்தூர் கழகம் மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளான இளைஞர்களை பங்கு பெறச் செய்வது எனவும்,
அக்டோபர் 26,27, இரண்டு நாட்கள் தாளவாடியில் நடந்த பெரியார்கள் பயிற்சி பட்டறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ணங்களை வீரியமாக செயலாற்றிய மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பனுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது எனவும், திராவிடர் கழகத்தின் அய்ம்பெரும் விழா நவம்பர் 10.11.2024இல் திருச்செங்கோட்டில் நடக்கவிருக்கிறது. நிகழ்வில் மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளாக கலந்துக் கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக நகர இளைஞரணி செயலாளர் மு.காமராஜ் நன்றி கூறினார்.