இது என்ன மனநிலை? சாமியார்களின் யோக்கியதை இதுதான்!

viduthalai
1 Min Read

உத்தரப் பிரதேசம் அயோத்தி கோவிலுக்கு அருகே ராமர் கோவிலுக்கு ஒரு கும்பத்தினருடன் வந்த சிறுமியை இரண்டு கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி இளைஞர்கள் எங்கள் ஊருக்கு வந்தவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும்.
ஆனால், கோவிலில் சாமி பெயரைக் கூறிக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளீர்களே வெட்கமாக இல்லையா என்று கேட்டுள்ளார்கள்.

இதற்கு அந்தச்சாமியார்கள் அவர்கள் முஸ்லீம் என்று கூறி அப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனால் கோபப்பட்ட உள்ளூர் இளைஞர்கள்கள் அர்ச்சகப் பார்ப் பனர்களை அடித்து துவைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அர்ச்சகப் பார்ப்பனர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முஸ்லீம் என்றால் என்ன வேண்டு மென்றாலும் செய்யலாம் – முஸ்லீம் சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்யலாம் – என்ற ஒரு அவல நிலை உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கி விட்டது.

உத்தரப் பிரதேசம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அங்குள்ள பலருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *