இம்பால், ஜூலை 29- மணிப்பூரில் இன வன்முறைகள் தொடரும் நிலை யில் தாம் முதலமைச்சர் பதவியி லிருந்து விலகமுடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்
அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களி டையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகி றது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களாக இணையசேவை துண்டிக்கப்பட்ட தால் மணிப்பூரின் உண்மை நிலவ ரம் வெளி உலகத்துக்கு தெரிவிக் கப்படவில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மணிப்பூர் வன்முறைகளில் 200க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் குக்கி பெண்கள் பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத் துச் செல்லப்பட்ட காட்சிப் பதிவு கள் வெளியாகி பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.
இந்நிலையில் மணிப்பூர் முத லமைச்சர் பதவியிலிருந்து விலக முடியாது என பைரேன் சிங் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைரேன்சிங் கூறியதாவது: பாஜக என்பது உலகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்று. பாஜகவின் டில்லி தலைமை சொல்வதைத்தான் நான் கேட்க முடியும். டில்லி தலைமை உத்தர விட்டால் நான் மணிப்பூர் முதல மைச்சர் பதவி விலக தயாராக இருக்கிறேன். மணிப்பூர் வன்முறை கள் தொடர்பாக 6,000க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் ஒன்றே ஒன்று தான் பாலியல் வன்கொடுமை வழக்கு. இம்மாநிலத்தில் அமை தியை ஏற்படுத்த ராணுவத்துடன் மாநில அரசு இணைந்து செயல் பட்டு வருகிறது. இவ்வாறு பைரேன் சிங் கூறியுள்ளார்.