31.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி: தொழிலாளர்களின் வருவாயில் தேக்கநிலை, ஏற்றத்தாழ்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு வீழ்ச்சி அடைவ தற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ் எச்சரிக்கை
தி ஹிந்து:
* மகாராட்டிரா ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சியில், அவர்கள் 2019இல் தந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என மும்பையை தளமாகக் கொண்ட சிவில் சொசைட்டி ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தெலங்கானா ஜாதிவாரி சர்வேக்கு 7 நாட்களில் சிறப்பு குழு அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு. தற்போதுள்ள ஆணையம் கணக்கெடுப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், நவம்பர் 6ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குடந்தை கருணா