காஞ்சிபுரம், அக். 30- காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘தமிழர் களின் பண்டிகையா தீபாவளி?’ என்னும் விழிப்புணர்வுத் துண் டறிக்கை காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராசர் சிலை அருகில் 28.10.2024 அன்று மாலை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட கழக இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இளம்பரிதி, மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், தமிழ் உரி மைக் கூட்டமைப்பு தோழர் காஞ்சி அமுதன், எழுச்சிப் பாடகர் உலக ஒளி, மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஷ், தோழர் பாலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் தோழர்கள், தோழர் ரவி பாரதி, தன்னாட்சித் தமிழகம் தோழர் பெ. பழனி, தோழர் பாரதி விஜயன், தோழர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Leave a Comment