கடந்த 22.7.2024 அன்று கோவிந்தராசன் குடும்பத்தினரின் மகிழ்ச்சி இல்லத்தில் அமைந்துள்ள பொறியாளர் ப.கோவிந்தராசன் அவர்களின் சிலையை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்ததன் நினைவாக அன்னாரது துணைவியார் சிவ.கனிமொழி, மகள் தென்றல் மற்றும் மகன் அறிவன் ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பாக இரண்டாண்டு ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.4000மும், 19 புத்தகங்களையும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, துணைத் தலைவர் க.தமிழினியன், வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினர். நூல்களை நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி…
– நூலகர்
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்