சென்னை, அக்.29- சென்னையின் முதல் படைப்பகம் கட்டடடத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.4ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை பெருநகர் வளர்ச் சிக்குழுமம் சார்பில், சென்னை அகரம் ஜெகநாதன் சாலையில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று (28.10.2024)ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில், கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து இருக்கிறார்கள். அதில் பயிற்சி முடித்த 105 பேருக்கு கம்ப்யூட்டர் மற்றும் 360 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இங்கு கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அந்த மய்யத்தில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் மூக்கு கண்ணாடி மற்றும் புத்தாடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் முதலமைச்சர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் முதன் முதலாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற நவ.4ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த படைப்பகத்தில் படிப்பதற்கு என்று ஒரு தளமும், அதைப் போல் பணியாற்றுவதற்கு என்று ஒரு தளமும், உணவு அருந்துவதற்கு உணவு கூடம் என்ற ஒரு தளமும் என 3 தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கலாம். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல் கோ-வர்கிங் ஸ்டேஷன் எனப்படுகின்ற. பணி செய்வதற்கான ஒரு தளம் உள்ளது. அதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் அமரலாம். 3 கலந்தாய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்துவதற்கு குறைந்தளவில் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது முழுவதுமாக இலவசம் என்றால் அதை வந்து பயன்படுத்துபவர்கள் நேர்த்தியானவர்கள் கிடைக்க மாட்டார்கள், பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ரூ.5, ரூ.10 என்ற கட்டணத்தைத் தான் நிர்ணயித்துள்ளோம். அதே போல் பணி செய்பவர்கள் கூட ‘கோ ஒர்கிங் ஸ்பேஸ்’ள-ல் பெரிய கம்பெனி களுக்கு வழங்கப் போவதில்லை. பொருளா தாரத்தில் சாதாரண நிலையில் இருக்கின்ற அந்த நிறுவனங்களுக்கு இந்த பணியிடத்தினை பகிர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செய லர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.