கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

1 Min Read

, ஜூலை 30 அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ. 314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து  முனையம் கட்டப் பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள்  அமைக்கப் பட்டுள் ளன. ஆம்னி பேருந்துக்கு என்று தனியாக பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம் பேட்டில் இருந்து செல்லும் 60% பேருந்துகள்  கிளாம் பாக்கதுக்கு மாற்றி இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந் நிலையில்  நேற்று (29.7.2023) அமைச்சர் பி.கே. சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். 

“கிளம்பாக்கம் பேருந்து முனை யத்தை பொறுத்தளவில் உட் கட்டமைப்பு  பணிகள் முழுதும் நிறைவடைந்துள் ளன. இந்நிலையில் இது பயன்பாட்டிற்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,  பருவமழை  காலங் களில் தண்ணீர் வடியும் வகையிலான மழை நீர் வடிகால்கள், அதிகளவு கூட்டம் சேருகின்ற நிலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல் துறை அலுவல கங்கள், மாற்று பாதைகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே. சாலை முதல் ஊரம்பாக்கம்- நல்லம் பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை  அமைக்கும் பணிகள், வனத்துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை  அமைத்திட கடந்த ஆட்சி  காலத்தில் முறையாக திட்ட மிடாததால் சற்று தாமதம் ஏற்பட் டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்பு மக்களுக்கு எந்தவிதத் திலும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் கலைஞர் நூற் றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு  கொண்டுவரப்படும்” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *