‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களின் நிலைகுறித்து கோவையில் நவ. 5, 6 தேதிகளில் கள ஆய்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு!

2 Min Read

சென்னை, அக்.27- திராவிட மாடல் அரசின் திட்டங்களின்நிலைகுறித்து கோவையில் வருகிற நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கள ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் கள ஆய்வை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப்பக்கத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
நமது திராவிட மாடலின் திறனைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தேன்!
நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்து மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன்.

கள ஆய்வுகள் நிறைவுற்றதும் தி.மு.க. பணிகளை ஆய்வு செய்யவுள்ளேன்.

-இவ்வாறு பதிவிட்டுள்ள முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்க்கண்ட வாசகங்களையும் பதிவிட் டுள்ளார்.
அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாகவே நான் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் பலரும், அவரவர் துறை சார்ந்த மற்றும் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திருந்தனர்.

அதனை நானும் துணை முதலமைச்சரும் மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, மாவட்ட வாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்தது.
நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதி நிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை ஊடகங்களும், பொது மக்களும் பாராட்டுகின்றனர்.

எதிர்வரிசையிலே இருப்பவர்கள், திராவிட மாடல் அரசு மீது அடிப் படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.

22.10.2024 அன்று நாமக்கல் மாவட் டத்தில் 19.50 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தேன்.

16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களின் செயல் பாடு குறித்துநவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன்.

கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்த பிறகு, தி.மு.க. பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்.

– இவ்வாறு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *