தஞ்சை, அக். 27- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத இனஇழிவு விழாவான தீபாவளியை கொண்டாடலாமா? என்னும் தலைப்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் மூடநம்பிக்கை ஒழிப்பு தெருமுனை பிரச்சார கூட்டம் 22.10.2024 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு,மற்றும் கோபு.பழனிவேல் பகுத்தறிவு பாடல்களை பாடினார்.
இக்கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரை உரையாற்றினார். மாநகர இணைச்செயலாளர் இரா. வீரக்குமார் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார், மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர துணைத்தலைவர் டேவிட், கீழவாசல் பகுதி தலைவர் ப.பரமசிவம், கீழவாசல் பகுதி செயலாளர் பெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்கவுரை வழங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயகுமார்,ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிறப்புரையில் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் அவர்கள் தீபாவளி எனும் மூடநம்பிக்கை விழா உருவான கதையையும், அவலத்தையும் எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினார்.
தீபாவளி எனபது இரணியாட்சன் என்னும் ஓர் அசுரன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தார்.(பூமியை பாயாக சுருட்டினால் கடல் எங்கே இருந்தது, பூமியை பாயாக சுருட்டமுடியுமென்றால் பூமி தட்டையா?உருண்டையா? என்று தந்தைபெரியார் கேள்வி கேட்கிறார்.) உடனே தேவர்கள் மாகாவிஷ்ணுவை சந்தித்து முறையிடுகிறார்கள்.அந்த மாகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்து கடலுக்குள் புகுந்து அந்த அரக்கனிடம் சண்டையிட்டு பூமியை(பூமாதேவி)காப்பாற்றினார். பூமாதேவிக்கும்,மகாவிஷ்ணுக்கும் காதல் ஏற்பட்டு நரகாசுரன் என்னும் அசுரன் பிறக்கிறான்.அந்த அசுரன் பார்ப்பனர்களை கொடுமைபடுத்துவதால் அவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவை முறையிட்டதால் அவர் பூமாதேவியை அனுப்பி தன்மகன் நரகாசுரனை அழித்துள்ளார். நரகாசுரன் இறக்கும் நேரத்தில் என் இறப்பை இந்தநாளை ஆண்டுதோறும் இந்த மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும்படி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதுதான் இந்த தீபாவளி என அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான இந்த கட்டுக்கதையை மக்கள் சிந்தித்து புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்தகூட்டத்தில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனிவேல், கிராம பிரச்சார மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன், புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் கலைச்செல்வன் மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர பாண்டியன்,ப க மாவட்ட தலைவர் அழகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் லட்சுமணன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் தங்க வெற்றிவேந்தன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.பிரகாஷ்,பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, பக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, பக மாவட்ட தலைவர் அழகிரி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் சேகர்,தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வம்,நாஞ்சிக்கோட்டை சாலை பெரியார்தாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இளவரசு நன்றியுரை வழங்கினார்.