புதுடில்லி, அக்.27 டில்லியில் மாசு ஏற்படுவதற்கான ஆதாரங்களை ட்ரோன் மூலம் கண்டறியும் சேவையை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் 25.10.2024 அன்று தொடங்கி வைத்தார்.
வாஜிர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் தூசி, வாகன உமிழ்வு மற்றும் திறந் தவெளியில் கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு மாசு மூலங்களைச் சமாளிக்க வடிவமைக்கப் பட்ட 21 அம்சங்களைக் கொண்ட குளிர்கால செயல் திட்டம் குறித்துப் பேசினார். மேலும், அவா் பேசுகையில்,
‘மாசுவைக் குறைக்கும் முயற்சிகளில் மக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும். டில்லி அரசு மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறது. டில்லியில் மாசு கண்காணிப்பில் ஒரு முன்னேற்றப்படியாக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் 200 மீட்டா் வரம்புக்குள் மாசு மூலங்களின் ஆதாரங்கள் குறித்து படம் பிடித்து அனுப்பும்.
அதன்படி, தீா்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ட்ரோன்கள் 120 மீட்டா் உயரத்தில் பறக்கும். மாசு அளவுகள் அதிகம் உள்ள பகுதிகளை திறம் பட கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன. மாசு தாக்கத்துக்கு முக்கிய காரணங்களாகக் கண்டறிப்பட்டுள்ள 13 இடங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியை டில்லி அரசு முன்னெடுத்துள்ளது’ என்றார்.