ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தார். மேள தாளங்களுடன் கழகத் தோழர்கள் வரவேற்பு அளித்தனர். மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ,செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழர் தலைவர் ஆகியோருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்தனர். (ஈரோடு – 26.10.2024)
கவுந்தப்பாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. மாவட்ட அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (26.10.2024)
கோபிசெட்டிபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு (26.10.2024)
உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் சீனிவாசன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன்: குடும்பத்தினர். (26.10.2024)